திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளது

திமுக கூட்டணி கட்சிகளுக்கு 60 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது என்பதும் அக்கட்சி 174 தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், உதயசூரியன் சின்னத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 200 தொகுதிகளில் போட்டி ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த கூட்டணியில் உள்ள எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரத்தை தற்போது பார்ப்போம்:

திமுக: 174 தொகுதிகள்
காங்கிரஸ்: 25 தொகுதிகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி:6 தொகுதிகள்
மதிமுக: 6 தொகுதிகள்
இந்திய கம்யூனிஸ்: 6 தொகுதிகள்
மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்: 6 தொகுதிகள்
ஐ.யூ.எம்.எல்: 3 தொகுதிகள்
மனிதநேய மக்கள் கட்சி:2 தொகுதிகள்
தமிழர் வாழ்வுரிமை கட்சி: 1 தொகுதி
மக்கள் விடுதலை கட்சி:1 தொகுதி
ஆதித்தமிழர் பேரவை: 1 தொகுதி
கொங்கு மக்கள் தேசிய கட்சி: 1 தொகுதி

Leave a Reply