shadow

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடம் மற்றும் கதிர் அரிவாள் சின்னம்

திமுக கூட்டணியில் இணைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விசிக, மதிமுக போல் இன்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது கட்சியின் சின்னமான கதிர் அரிவாள் சின்னத்தில் தான் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது கதிர் அரிவாள் சின்னத்தில் தான் போட்டியிடும் என்பதை அக்கட்சியின் முன்னணி தலைவர் முத்தரசன் உறுதி செய்துள்ளார். அதேபோல் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது சின்னத்தில்தான் போட்டியிடும் என தெரிகிறது

இந்த நிலையில் இரண்டே இரண்டு தொகுதிகளுக்காக தங்கள் கட்சியின் தனித்துவத்தை இழப்பதா? என விசிக தொண்டர்கள் சமூக வலைத்தளத்தில் ஆவேசமான கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply