shadow

திமுக-காங். கூட்டணியில் பாமக சேர வாய்ப்பு- வசந்தகுமார் பேட்டி

அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணையும் என்று ஒருபக்கம் செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பாமக, திமுக கூட்டணியில் இடம்பிடிக்க முயற்சித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் இன்று அமித்ஷா சென்னை வருவதால் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில் திமுக-காங். கூட்டணியில் பாமக சேர வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் துணைத்தலைவர் வசந்தகுமார் பேட்டி அளித்துள்ளார்

ஒரே நேரத்தில் இரண்டு கூட்டணியிலும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாமக நிலைப்பாடு தெளிவாகாத நிலையில் வசந்தகுமாரின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply