திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையாது: திருநாவுக்கரசர்
திமுகவுடன் கூட்டணி இல்லை, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று என்னால் உறுதியாக கூற முடியாது என நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். எனவே வரும் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி இல்லை என்பதே இதன் அர்த்தமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘திமுக – காங். கூட்டணி பலமாக உள்ளது, அது உடையாது என்றும், காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று சொல்லமாட்டேன் என கமல் கூறியது, ஒரு கட்சி தலைவராக எனக்கு மகிழ்ச்சியான செய்தி என்றும் கூறியுள்ளார்.
திமுகவுடன் கூட்டணி இல்லை என கமல் கூறியதற்கும், திமுக – காங். கூட்டணி பலமாக உள்ளது என்று திருநாவுக்கரசர் கூறி வருவதற்கும் முரண்பாடாக இருப்பதாக சமூக வலைத்தள பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.