shadow

திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தால் என்ன நடக்கும்?

தினகரன் அணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 98 எம்.எல்.ஏக்களும் அதிரடியாக ராஜினாமா செய்யவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில் திமுக அப்படி ஒரு முடிவை எடுத்தால் என்ன நடக்கும் என்பது பலரது கேள்வியாக உள்ளது. ஒரு சட்டமன்றத்தில் மூன்றில் ஒரு பகுதி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தால் சட்டமன்றம் கலைக்கப்பட்டு மறுதேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் வேறு இரண்டு வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் வைப்பது. இன்னொரு வாய்ப்பு ராஜினாமா செய்த அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்கள் எம்.எல்.ஏ பணியை தொடரலாம், ஆனால் அவர்கள் சட்டமன்றத்திற்கு வரமுடியாது, எந்த வாக்கெடுப்பிலும் கலந்து கொள்ள முடியாது என்பது. எனவே திமுக கூட்டணி ராஜினாமா செய்வது ரிஸ்க் என்றே கூறப்படுகிறது.

Leave a Reply