திமுக ஆட்சியை கலைத்ததற்கு உண்மையான காரணம் இதுதான்: சுப்பிரமணியன் சுவாமி

கடந்த 1991ஆம் ஆண்டு இந்திய பிரதமராக சந்திரசேகரும், சட்ட அமைச்சராக சுப்பிரமணிய சுவாமியும் இருந்தபோது, விடுதலைப் புலிகளுடன் தமிழக அரசுக்கு தொடர்பு இருந்ததாக கூறி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

இந்தந் நிலையில், 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதற்கு சுப்பிரமணிய சுவாமி தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய விளக்கம் இப்போது கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமானது தமிழகத்தில் மூளைச்சலவை செய்ததால், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் பிராமணர்களை தாக்குகின்றனர். கருணாநிதி பிராமண ராவணனை வழிபடுகிறாவர். 1991ல் திமுக ஆட்சியை நான் கலைத்ததற்கு இவையெல்ல்லாமும் காரணங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply