shadow

திமுக, அதிமுக, தேமுதிக மட்டுமே அங்கீகாரம் பெற்ற கட்சிகள்: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்றும் மற்ற கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மட்டுமே என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஒரு காமெடி கூறுவதுண்டு. நாளுக்கு நாள் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதும், ஒரு கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சி தொடங்குவதும் தமிழகத்தில் சாதாரணமாக நிகழும் நிகழ்வுகள் ஆகும்.

இந்த நிலையில், தமிழத்தில் இருக்கும் மாநிலக் கட்சிகள் குறித்த தகவல் ஒன்றைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க), திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) மற்றும் தேசிய முற்போற்கு திராவிட கழகம் (தே.மு.தி.க) ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சிகளாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர்த்து, ம.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் பதிவு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்து அங்கீகாரம் பெறாத கட்சிகளாகத் தமிழகத்தில் 154 கட்சிகள் உள்ளன எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திமுக, அதிமுக, தேமுதிக , தேர்தல் ஆணையம்

ADMK, DMK, DMDK only three parties are recognised

Leave a Reply