திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்:

அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடுமையாக தாக்கிய நிலையில் சற்றுமுன் அவர் திமுகவில் இணைந்தார்.

முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ஆளுமை மிக்க தலைவரை ஏற்று திமுகவில் இணைந்துள்ளதாகவும், ஸ்டாலின் ஆளுமை மிக்கவர் என்பது மக்களவை தேர்தல் முடிவு காட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசியல் செய்ய ஆரம்பித்த காலத்தில் இருந்து திமுகவை விமர்சனம் செய்து வந்த தங்க தமிழ்ச்செல்வன், இனி ஜெயலலிதாவை தாக்கி பேசுவாரா? சசிகலா குறித்து அவர் எப்படி விமர்சனம் செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply