மேஷம்

சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மதிப்புக் கூடும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்’

ரிஷபம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத் தெறிவீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

மிதுனம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொள்வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். புது நட்பு மலரும்-. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

கடகம்

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் முடியும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

சிம்மம்

திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

கன்னி

கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

துலாம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்தப் போகும். சின்ன சின்ன பிரச்னைகள் குடும்பத்தில் தலைத்தூக்கும். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. எல்லோரும் உங்களைக் குறைக் கூறுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

விருச்சிகம்

எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உறவினர், நண்பர்களில் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

தனுசு

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

மகரம்

இன்றையதினம் முயற்சியால் முன்னேறுவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

கும்பம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் விலகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

மீனம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

Leave a Reply