shadow

தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் எங்கே? புதுச்சேரியை காலி செய்தது ஏன்?

புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் திடீரென கர்நாடக மாநிலம், குடகு மலை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

அ.தி.மு.க.,வில் கட்ந்த சில மாதங்களாகவே அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் தினகரன் அணியிலிருந்த, எம்.எல்.ஏ., ஜக்கையன் திடீரென முதல்வர் பழனிசாமிக்கு திடீரென ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த தினகரன் தரப்பு ஜக்கையன் போல் வேறு யாரேனும் பழனிசாமி அணிக்கு தாவக்கூடாது என்ற காரணத்தால், புதுச்சேரி சொகுசு பங்களாவில் இருந்த தங்கள் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை, நேற்று அதிரடியாக இடம் மாற்றியது.

கர்நாடகாவின் குடகு மலை பகுதிக்கு இவர்கள் அனைவரும், நேற்று புறப்பட்டு சென்றதாகவும் அங்கு இவர்கள் தங்க ‘விண்ட் பிளவர்’ சொகுசு விடுதி முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply