shadow

தினகரனின் 3வது அணியில் எந்தெந்த கட்சிகள்?

வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி ஒருபுறமும், திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்னொரு புறமும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தினகரன் கட்சியான அமமுக தலைமையில் 3வது கூட்டணி அமையும் என்றும், மேற்கண்ட இரண்டு கூட்டணியிலும் இடம் கிடைக்காத நிலையில் ஒருசில கட்சிகள் இந்த கூட்டணியில் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாமக, விசிக ஆகிய கட்சிகள் அதிமுக, திமுக கூட்டணியில் இணைய முயற்சித்து வந்தாலும், அந்த கூட்டணியில் தாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைக்காவிட்டால் தினகரன் கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

அதேபோல் கமல் கட்சியான மக்கள் நீதி மய்யம், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட ஒருசில கட்சிகளுடன் தினகரன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

Leave a Reply