திட்டமிட்டபடி வெளிவருமா அதர்வாவின் ‘100?

அதர்வா நடித்த ‘100’ திரைப்படம் முதலில் மே 3ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு பின்னர் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்திற்கு ஜூன் 17 வரை நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

70 எம்.எம் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ”பலூன்’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைக்காக தரவேண்டிய ஒரு கோடி ரூபாயை எம்.ஜி.ஆரா சினிமாஸ் நிறுவனம் பாக்கி வைத்துள்ளதாகவும், அந்த நிலுவைத் தொகையை தரும் வரை நூறு படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “100” படத்தை ஜூன் 17வரை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த தடையை உடைத்து திட்டமிட்டபடி 100 வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Leave a Reply