திடீரென திவாலான விமான நிறுவனம்: 21 ஆயிரம் வேலை இழப்பா?

பிரிட்டன் நாட்டை சேர்ந்த தாமஸ் குக் என்ற விமான நிறுவனம் திடீரென திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 21 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகும் ஆபத்து உருவாகியுள்ளது.

கடந்த 1881 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சுமார் 150 ஆண்டுகள் இயங்கி வந்த தாமஸ் குக் நிறுவனம் உலகின் பல முன்னணி வங்கிகளில் கடன் பெற்று நிறுவனத்தை விரிவுபடுத்தியது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தாமஸ் குக் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று அந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தாமஸ் குக் நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டது. இதனால் இந்த நிறுவனத்தின் விமானங்களில் முன்பதிவு செய்து பயணத்திற்காக காத்திருக்கும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் வீடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply