shadow

தளம் புதிது: உடனடி மொழிபெயர்ப்பு வசதி
technology
இணையத்தின் மூலம் கருத்துகளை வெளியிடுவது மிகவும் எளிது. சில நேரங்களில் தாய்மொழி தவிர பிற மொழிகளிலும் கருத்துகளை வெளியிட இணையத்திலேயே மொழிபெயர்ப்பு வசதியும் இருக்கிறது. இப்படிப் பல மொழிகளில் மொழிபெயர்க்கும் வசதியை ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறது ‘ட்ரான்ஸ்லேட்டர்’ இணைய‌தளம்.

எளிமையாக உள்ள இந்தத் தளத்தில் மேல் பக்கத்தில் மொழிபெயர்க்க விரும்பும் வரிகளை டைப் செய்து விட்டு, கீழே உள்ள பட்டியலில் இருந்து மொழிபெயர்க்கப்பட வேண்டிய மொழியைத் தேர்வு செய்துகொள்ளலாம். அவ்வளவுதான், மொழிபெயர்ப்பு முடிந்தது. ஆனால் நீளமான பத்திகளுக்கு எல்லாம் பொருத்தமாக இருக்காது. சின்னச் சின்ன வாசகங்கள் என்றால் சரியாக இருக்கும். ஒரே நேரத்தில் பல மொழிகளிலும் மாற்றிக்கொள்ளலாம். மிக எளிமையான சேவை. ஆனால் பயன்மிக்கது. கூகுள் மொழிபெயர்ப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி: //translatr.varunmalhotra.xyz

Leave a Reply