shadow

தளம் புதிது: இணையத்தில் முதல் முதலாக…

இணைய வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது சுவாரசியமான விஷயம்தான். ஆனால் அதற்காகப் பக்கம் பக்கமாகப் படித்துக்கொண்டிருக்க முடியாது என நினைத்தால், விஷுவல் கேபிடலிஸ்ட் இணையதளம், இணைய வரலாற்றை அழகான தகவல் வரைபடமாகச் சுருக்கித் தருகிறது.

ஒரே ஒரு முறை ஸ்க்ரால் செய்து படிப்பதன் மூலம் இணைய வரலாற்றைத் திரும்பிப் பார்க்க இந்தத் தகவல் வரைபடம் வழி செய்கிறது. 1969-ல்தான் இணையத்துக்கான முதல் வித்து விழுந்தது. அதிலிருந்து தொடங்கி, இணையம் மூலம் அனுப்பப்பட்ட முதல் இமெயில், முதல் குப்பை மெயில், இணையத்தில் பகிரப்பட்ட முதல் ஒளிப்படம், இணையத்தின் முதல் வலைப்பக்கம், முதல் தேடியந்திரம், முதல் வலை முகவரி, முதல் வீடியோ என இணய மைல்கற்களை அழகாகப் பட்டியலிடுகிறது.

முதல் வெப்கேம், இணையத்தில் பதிவேற்றிய முதல் பாடல், முதல் இணைய விளம்பரம் ஆகிய தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். பேஸ்புக் முதல் தகவல் சித்திரம், முதல் இன்ஸ்டாகிராம் பதிவு என நீள்கிறது இந்தப் பட்டியல். சுருக்கமாக இணைய வரலாற்றைத் தெரிந்துகொள்ள இந்தத் தளம் சுவாரசியமாக வழிகாட்டுகிறது.

இந்த இணைய மைல்கற்கள் தொடர்பான கூடுதல் தகவல்கள் வரைபடத்தின் கீழே குறிப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் அதைக் கொண்டு மேலும் இணப்புகளைத் தேடிச் செல்லலாம்.

இணைய முகவரி: //www.visualcapitalist.com/internet-firsts/

Leave a Reply