அதிர்ச்சி தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் டிராப் செய்து விட்டதாக கூறப்படுகிறது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விஜய்யின் சம்பளத்தை குறைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் வலியுறுத்தியதாகவும் ஆனால் விஜய் தனது சம்பளத்தை குறைக்க மறுத்ததால் இந்த படத்தை டிராப் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து தளபதி 65 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் என்றும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

தளபதி விஜய்க்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் 60 கோடி வரை சம்பளம் தருவதாக தெரிவித்ததாகவும் ஆனால் விஜய் 80 கோடி சம்பளத்தை பிடிவாதமாக இருந்ததால் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் டிராப் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply