‘தளபதி 63’ படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக உரிமையை வளர்ந்து வரும் பிரபல விநியோகிஸ்த நிறுவனமான ஸ்க்ரீன் சீன் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே ‘தடம்’, நட்பே துணை’ ஆகிய திரைப்படங்களை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளிவரும்போது அதில் இந்நிறுவனத்தின் லோகோவும் இருக்கும் என்றும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

Leave a Reply