தளபதி விஜய் தான் என் பாய்பிரண்ட்: பிரபல நடிகை பேட்டி

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில் ராஷ்மிகா நடித்து முடித்துள்ள தெலுங்கு திரைப்படம் ஒன்று விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தபோது அவரிடம் ’உங்களுக்கு நண்பராக, பாய்பிரண்ட்டாக, கணவராக எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என்று கேள்வி கேட்கப்பட்டது

இந்த கேள்விக்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா, ‘தனக்கு நண்பராக நடிகர் நிதின் பொருத்தமாக இருப்பார் என்றும், விஜய் தனக்கு பாய்பிரண்ட் ஆக பொருத்தமாக இருப்பார் என்றும் தெரிவித்தார். மேலும் கணவராக எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என்பதற்கு தான் பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறிய ராஷ்மிகா, திருமணம் செய்தால் ஒரு தமிழ் நடிகரை தான் திருமணம் செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்

விஜய்யை நிஜத்தில் பாய்பிரண்டாக்க ராஷ்மிகாவுக்கு வாய்ப்பில்லை என்றாலும் விரைவில் திரைப்படத்திலாவது பாய்பிரண்டாக மாறுவார் என்று எதிர்பார்ப்போம்

Leave a Reply