shadow

தளபதிக்கு பின் ரஜினி, துப்பாக்கிக்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்திற்கு பின் அவருடனும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘துப்பாக்கி’ படத்திற்கு பின் அவருடனும் மீண்டும் இணைகிறார் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்

ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை சந்தோஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவிருப்பதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன

Leave a Reply