‘தல 60’ படத்தின் பூஜை தேதி அறிவிப்பு

‘தல 60’ என்று கூறப்படும் அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் பூஜை வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார். மேலும் அதே நாளில் இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே ஆகஸ்ட் 8ஆம் தேதி அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அதே ஆகஸ்ட் மாதம் ‘தல 60’ படத்தின் பூஜையும் தொடங்கவுள்ளதால் அஜித் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம் ஏற்பட்டுள்ளது

இந்த தகவலை போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். எச்.வினோத் இயக்கும் இந்த படம், ஒரு மோட்டார் சைக்கிள் ரேஸ் குறித்த படம் என்றும், இந்த படத்தில் ஒரு ரேஸர் கேரக்டரில் அஜித் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply