’தலைவர் 168’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் அமிதாப்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது
இந்தப் படத்திற்கான நட்சத்திரங்கள் தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு இயக்குனர் சிறுத்தை சிவா தீவிரமாக நடத்தி வருகிறார்
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் தோன்றும் ஒரு முக்கிய கேரக்டர் இருப்பதாகவும் அந்த கேரக்டரில் நடிக்க வைக்க மூன்று பிரபலங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
அந்த மூன்றில் ஒருவர் அமிதாப்பச்சன் என்ற தகவலும் லீக் ஆகிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தில் அமிதாப் சிறப்பு தோற்றத்தில் நடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.