‘தலைவர் 167’ படத்தில் வில்லன் யார்? படக்குழுவினர் விளக்கம்
கடந்த சில நாட்களாக ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமான ‘தலைவர் 167” படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் இந்த செய்தியை படக்குழுவினர் தரப்பு மறுத்துள்ளது. தலைவர் 167 படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா தவிர வேறு யாரும் இன்னும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றும், இதுபோன்ற வதந்தியை மீடியாக்கள், ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும், இந்த படத்தின் வில்லன் குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.
இதனையடுத்து இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது
Leave a Reply
You must be logged in to post a comment.