தலைவர்களின் சிலை உடைப்பு சம்பவம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தலைவர்களின் சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்றும் படி அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்ம் அருகே ஜீப் ஒன்று சாலையில் சென்றவர் மீது விவகாரம் பெரிதாகி இரு பிரிவினருக்கு இடையேயான மோதலாக மாறியது. இந்த மோதலில் அங்கிருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பார்வேந்தன் என்பவர் முறையீடு செய்தார்

சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிச் சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றூம், தலைவர்களின் சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்

இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிச் சட்டம் இயற்றும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது எனத் தெரிவித்ததோடு இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டனர்

Leave a Reply