தலைவணங்கி ஏற்கிறேன்: என்.ஜி.கே விமர்சகர்களுக்கு சூர்யா நன்றி

சூர்யா நடித்த என்.ஜி.கே திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் தந்த அனைவருக்கும் தனது நன்றியை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

என்.ஜி.கே திரைப்படம் குறித்த அத்தனை கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்ட கதையம்சத்தையும் நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி

Leave a Reply