shadow

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வெந்தயம்

1முடி உதிர்வை தடுக்க

1. முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு வெந்தயத்தை அரைத்து, அதனுடன் சிறிது எழுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இந்த வெந்தய பசையை உச்சந்த தலையில் அழுத்தி தடவ வேண்டும். தலை முழுவதும் தடவிய பிறகு, சிறிது நேரத்திற்கு நன்கு அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வர முடி உதிர்வை தடுக்கலாம்

முடி வளர்ச்சிக்கு

2. ஒரு கையளவு வெந்தயத்தை எடுத்து அதை ஒரு தேங்காய் எண்ணெய் உடன் கலந்து கொள்ள வேண்டும். இதை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்க வேண்டும். வெந்தயம் சிவப்பு நிறமாக மாறும் வரை சூடாக்க வேண்டும்.

சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்கு பசை போன்று அரைக்க வேண்டும். அதன் பின்னர் அந்தக் கலவையை உச்சந்தலையில் அழுத்தி தடவ வேண்டும்.

சிறிது நேரம் நன்று ஊற வைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இந்த முறையை அடிக்கடி பின்பற்ற முடி நன்கு வளரத் தொடங்கும்.

3. தலையில் ஏற்படும் அரிப்பை போக்க

முதல்நாள் இரவே வெந்தயத்தை நன்கு ஊற வைக்க வேண்டும். மறுநாள் அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு, வெந்தயத்தை நன்கு பசை போல் அரைக்க வேண்டும். அதன் பின்னர் அந்த பசையுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை கலக்க வேண்டும்.

முட்டை பிடிக்கவில்லை என்றால் அதனுடன் எழுமிச்சை சாறு சேர்த்து கலவையை நன்கு கலக்க வேண்டும். இப்பொழுது இந்தக் கலவையை உச்சந்தலையில் நன்கு அழுத்தி தடவ வேண்டும். பின்னர் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர தலையில் ஏற்படும் அரிப்பை தடுக்கலாம்.

4. பொடுகைப் போக்க

முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். மறுநாள் அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு, வெந்தயத்தை நன்கு பசை போல் அரைக்க வேண்டும். அதன் பின்னர் அந்த பசையுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இந்தக் கலவையை உச்சந்தலையில் முடியின் வேர் வரை படரும்படி தடவ வேண்டும். அதன் பின்னர் சுமார் 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வர பொடுகுத் தொல்லை நீங்கும்.

Leave a Reply