shadow

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் தரிசன தேதியை மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவையில் பங்கேற்க முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தாங்கள் முன்பதிவு செய்து கொண்ட தேதியை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது

ஆர்ஜித சேவைகள் ஆன்லைன் டிக்கெட் கடந்த ஏப்ரல் 21 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை வினியோகம் செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த தேதியில் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு தேதிக்கு மாற்றி கொள்ளலாம் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது