shadow

தயாரிப்பாளர் ஆகிறார் வைகோ: வேலுநாச்சியார் வேடத்தில் யார்?

இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முதல் வித்திட்ட சிவகெங்கை சீமை வேலுநாச்சியாரின் நாட்டிய நாடகம் நேற்று நடைபெற்றபோது இந்த கதையை திரைப்படமாக உருவாக்க தான் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்தை தானே தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அன்பு கொண்ட சகோதர சகோதரிகளே இந்த எளியவனுடைய அழைப்பை ஏற்று இந்த அரங்கத்தில் வந்து தமிழர்களின் உயிர்க் காவியமான இமயமலை முதல் அலைகள் பொங்கி விளையாடும் கன்னியாகுமரி முனை வரை இந்த உபநிடத்திலே ஆதவன் அஸ்த்தமைக்காத எங்களை பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் கட்டளை புரிந்து கொண்டிருந்தது ஏகாதிபத்தியத்தை முதலில் வெற்றி கொண்டவர் வேலுநாச்சியார். நான் ஜான்ஸி இராணியை மதிக்கிறேன். காந்தியத்தை, நானாசாகிப்பை மதிக்கிறேன் அவர்கள் வாழ்வில் சொன்னதை நான் பெருமையாக நினைக்கிறேன். ஆனால் அவர்கள் பெற முடியாத வெற்றியை தென்னாட்டு சிவகெங்கை அரசி அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெற்ற வரலாற்றை திருவள்ளுவரின் படத்தை தீட்டிய வேணுகோபால்சர்மா அவர்களின் அருமை திருமகனார் சிரிகாந்சர்மா அவர்கள் ஆறரை ஆண்டுக்கு முன்னால் சந்தித்து பேசியபோது மெய் மறந்து போனேன்.

இந்த நாட்டிய நாடகத்தில் நீங்கள் வேலுநாச்சியாரை கண்டிர்கள் உணர்ச்சிகளின் கொந்தளிப்பாக நடிகர் திலகம் நமக்கு எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனாக காட்சி அளித்தாரோ அதைபோல சகோதரி மணிமேகலைசர்மா வேலுநாச்சியாராகவே இங்கு காட்சி அளித்தார். இந்த காவியத்தை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காட்டுவதற்கான காரணம் இங்கே ஹைதர் அலியும் வேலுநாச்சியாரின் சந்திகின்ற காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. மறவர் சீமையில் மகாராணிக்கு வந்தனன் என்று புரியட்டும் என்னை தமைக்கையாக ஏற்று கொண்ட பாதுசாவுக்கு அவர்கள் நன்றி கூறியது.படைபலத்தை கேட்டதும் இந்து முஸ்லிம் ஒற்றுமையை நிலை நாட்டுகின்ற ஒரு உணர்வு தமிழ் நாட்டுக்கு தேவைஎன்பதை நான் இங்கு நினைவுட்டுகிறேன். வேலுநாச்சியார் திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு அதை கண்ணகி பிலிம்ஸ் மூலம் தயாரிப்பதில் பெருமைபடுகிறேன்’ என்று கூறினார்

Leave a Reply