shadow

தம்பிதுரை திடீர் பதவி நீக்கம்: தமிழக அரசியலில் திருப்பமா?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை நீக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தினகரன் அவ்வப்போது அதிமுகவின் நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று அவர் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலிருந்து தம்பிதுரையை நீக்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி நாகை மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து ஓ.எஸ்.மணியன் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த பதவிக்கு தங்கதமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் தினகரன் மேலும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக பொதுக்குழுவில் தினகரன் நியமனம் செய்த நியமனங்கள் செல்லாது என்று தீர்மானம் இயற்றப்பட்டுள்ள நிலையில் தினகரனின் இந்த நியமனம் செல்லுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Leave a Reply