தமிழ்நாடு தினம்: திகவை தூண்டி விடுகிறதா திமுக?

திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி நடந்து வரும் தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு தினமும் மாறி மாறி வருவதுண்டு.

தை முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு என திமுக ஆட்சியிலும், சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு என அதிமுக ஆட்சியிலும் அறிவிப்பதுண்டு. இதனால் உண்மையான தமிழ்ப்புத்தாண்டு எது? என்ற குழப்பம் மக்களுக்கு வருவதுண்டு.

அதேபோல் தற்போது தமிழ்நாடு தினம் என்று கன்னியாகுமரி, தமிழகத்தில் இணைந்த தினமான நவம்பர் 1ஆம் தேதியை தமிழக அரசு கொண்டாடியது. இந்த கொண்டாட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் திமுக இதனை நேரடியாக எதிர்க்காமல், திகவை தூண்டிவிட்டு எதிர்ப்பு தெரிவித்தது

அதனையடுத்து திக தலைவர் கி.வீரமணி, ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு என அண்ணா பெயர் வைத்ததாகவும், அன்றைய தினம் தான் தமிழ்நாடு தினம் என கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு குழந்தை பிறந்த தினத்தை பிறந்த நாளாக கொண்டாடுவார்களா? அல்லது பெயர் வைத்த தினத்தை பிறந்த தினமாக கொண்டாடுவார்களா? என நெட்டிசன்கள் திக, திமுகவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Leave a Reply