shadow

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் யார்?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரி அவர்கள் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றின்மூலம் உறுதி செய்துள்ளது.

அதேபோல் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று மாலை டெல்லியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரை தேர்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய தலைவரை நியமனம் செய்துள்ளதாக தெரிகிறது.

 

Leave a Reply