shadow

தமிழன் என்பதால் விஜய் படத்திற்கு எதிர்ப்பா? டி.ராஜேந்தர் கேள்வி

ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் கடந்த மாதம் வெளியான ‘சர்கார்’ பட போஸ்டர் விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையை அடுத்து சென்னை ஐகோர்ட்டும் விஜய் உள்பட படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் இந்த படத்திற்கு எதிரான பிரச்சனைகள் நீண்டுகொண்டே போகிறது.

இந்த நிலையில் இந்த எதிர்ப்பு குறித்து பிரபல இயக்குனரும் விஜய்க்கு நெருக்கமானவருமான டி.ராஜேந்தர் கூறியபோது, ‘தனி மனித ஒழுக்கம் அனைத்து நடிகர்களுக்கும் அவசியம். ஏன் விஜய் படத்துக்கு மட்டும் எதிர்ப்பு கிளம்புகிறது. தமிழன் என்பதால் எதிர்க்கிறார்களா? புகையிலையை ஒழிக்காமல் புகைப்பிடிக்கும் காட்சிகளை எதிர்க்கின்றனர். புகையிலையை முழுமையாக அரசு தடை செய்ய ஏன் முழு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது?

இவ்வாறு டி.ராஜேந்தர் இந்த பிரச்சனை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Leave a Reply