shadow

தமிழகம் முழுவதும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் நேற்று திடீரென 7 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மாற்றப்பட்ட அதிகாரிகள் மிக விரைவில் தங்கள் பொறுப்புகளை ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1. கோவை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ்-திருச்சி மாநகரக் காவல் ஆணையராக இடமாற்றம்

2. திருச்சி மாநகரக் காவல் ஆணையர் ஏ.அருண் – சென்னை மாநகரப் போக்குவரத்துக் கூடுதல் ஆணையராக மாற்றம்

3. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கூடுதல் ஆணையர் பெரியய்யா-கோவை மாநகரக் காவல் ஆணையராக நியமனம்

4. சிவில் பொதுவிநியோகம் மற்றும் தடுப்புப் பிரிவு சி.ஐ.டியாக இருந்த ஜி.வெங்கட்ராமன்- சென்னைக் காவல் நிர்வாக ஐ.ஜியாக நியமனம்

5. சென்னைக் காவல் நிர்வாக ஐ.ஜியாக இருந்த தினகரன்-சென்னை காவல்துறையின் ஸ்தாபன ஆணையராக இடமாற்றம்

6. இன்டர்கேடர் டிபுடேஸன் பிரிவு துணை ஐ.ஜி. சோனல் வி.மிஸ்ரா-சென்னைக் காவல் பயிற்சி கல்லூரி துணை ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

7. உத்தரப்பிரதேசத்திலிருந்து பணிமாற்றத்தில் வரும் ஐ.பி.எஸ் அதிகாரியான அமனந்த் மான்-சென்னை அமலாக்கப்பிரிவு சூப்பிரன்டாக நியமனம்

Leave a Reply