தமிழகத்தில் 4 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா முழுவதும் 60 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிப்பதை மாணவர்களும், பெற்றோர்களும் பெருமையாக கருதி வரும் நிலையில் கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில் சற்றுமுன் நாடு முழுவதும் 60 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் ஒப்புதல் அளித்துள்ளது என்பதும் இதில் தமிழகத்தில் திருப்பூர், மதுரை, கோவை மற்றும் சிவகங்கை ஆகிய 4 இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply