shadow

தமிழகத்தில் 125 கோடியை தொட்ட விஸ்வாசம்!

பொங்கலை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி வெளியான தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படம் வரும் சனி அல்லது ஞாயிறுக்குள் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலை கடக்கும் என்று முன்னணி விநியோகிஸ்தர் ஒருவர் கூறியிருந்தார்.

ஆனால் விஸ்வாசம் படம் நேற்றே ரூ.125 கோடி வசூலை கடந்துவிட்டதாக கே.ஆர்.ஜே ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ‘அங்காளி பங்காளியோட ஆதரவில் தமிழகத்தில் மட்டும் ‘விஸ்வாசம்’ ரூ.125 கோடி வசூலை இன்று கடந்துவிட்டது. நன்றி மக்களே! என அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ‘விஸ்வாசம்’ படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைபெற்றுள்ளது.

 

Leave a Reply