shadow

தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக கவர்னர் ரோசய்யா அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகியும் தமிழகத்திற்கு என கவர்னர் நியமனம் செய்யப்படாமல் இருந்த நிலையில் இன்று தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மேகாலயா ஆளுநராக தற்போது உள்ள பன்வாரிலால், 3 முறை லோக்சபா எம்.பி-யாக இருந்தவர். பார்வர்டு பிளாக், காங்கிரஸிலிருந்து பின்னர் தனிக்கட்சித் தொடங்கி அந்தக் கட்சியை பா.ஜ.க-வுடன் இணைத்தவர். கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

மேகாலயாவில், தஞ்சையைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சண்முகநாதன், பெண்கள் விவகாரத்தில் சிக்கிப் பதவி இழந்த நேரத்தில் புரோஹித் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வயது 77.

Leave a Reply