தமாகா, கொ.ம.தே கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நாமக்கல் தொகுதியில் போடியிடும் கொ.ம.தே கட்சியின் வேட்பாளராக ஏ.கே.பி சின்ராஜ் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் தமாகா கட்சி வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

தமாக வேட்பாளராக ஜிகே வாசன் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் பலர் அறிவுறுத்தியும் தனது தந்தை ஜி.கே.மூப்பனார் பாணியில் தேர்தலில் போட்டியிடாமல் ஜிகே வாசன் கட்சி பணியை மட்டுமே கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply