shadow

தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ விரைவில் ரிலீஸ்

தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நட்ந்து வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருசில காரங்களால் தாமதமாகிவந்த நிலையில் தற்போது ஒருவழியாக படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் பி.மதன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் சென்சாருக்கு சென்றுள்ளதாகவும் இன்று அல்லது நாளை இந்த படம் சென்சார் செய்யப்பட்டு அதன் சான்றிதழ் கிடைத்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே நீண்ட நாள் காத்திருந்தாலும் ஒரு விறுவிறுப்பான விருந்து ரசிகர்களுக்கு காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒருசில பாடல்கள் ஏற்கனவே ரிலீசாகி ஹிட்டாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply