தனுஷின் அடுத்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்?

எம்ஜிஆர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தை அந்த கால ரசிகர்களால் மறக்கவே முடியாது. டிஜிட்டலில் இந்த படம் தற்போது வெளிவந்தாலும் சூப்பர் வசூலை கொடுக்கும் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்திற்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற டைட்டிலை வைக்க பரிசீலனை நடந்து வருகிறது. ஏற்கனவே உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் அடுத்த பாகமான ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து வரும் நிலையில் இது சாத்தியமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

Leave a Reply