தண்ணீரில் கரைந்துவிடும் மின்னணு உதிரி பாகங்களை சீனாவிலுள்ள டியான்ஜின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர். இந்த புதிய முறையில் தயாரித்த மின்னணு பொருட்கள், தண்ணீரில் 40 மணி நேரத்திற்குள் முற்றிலும் கரைந்து விடும்.

பாலிவினைல் ஆல்கஹால், துத்தநாகம்,வெள்ளி நேனோ கம்பிகள் போன்ற பொருட்களை வைத்து ஒரு கைக் கடிகாரம் ஒன்றை தயாரித்தனர். உலகில், மின்னணு குப்பை பெரும் சவாலாக ஆகிவரும் நிலையில், இத்தகைய புதுமைகள் நிச்சயம் நல்ல தீர்வாகும்.