தங்க மங்கை பிவி சிந்துவுக்கு முன்னாள் தங்க மங்கை பாராட்டு

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாறு சாதனையை நிகழ்த்தியுள்ள இந்திய வீராங்கனை பி.வி சிந்துவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது இந்தியாவின் முன்னாள் தங்க மங்கை பிடி உஷா அவர்கள் பிவி சிந்துவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

பிடி உஷா தனது டுவிட்டரில், ‘விளையாட்டில் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இருக்கும் போது, அது நல்ல பயனை தரும். பி.வி.சிந்துவின் இந்த வெற்றி வரும் காலத்தில் பல வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும். பி.வி.சிந்துவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்

 

Leave a Reply