shadow

தங்க நகைக்கடன் வாங்க போறீங்களா? அதற்கு முன் இதனை படியுங்கள்

அவசர தேவைக்கு யாரும் உதவி செய்ய முன்வராத போது ஒவ்வொருவரிடம் இருப்பது அவர்களது சேமிப்பான தங்க நகைகளே. அழகுக்கான ஆபரணமாக மட்டுமின்றி அவசர தேவைக்கும் தங்கம் உதவினாலும், தங்க நகைக்கடன் வாங்கும்போது முக்கியமாக சிலவிஷயங்களை கவனிக்க வேண்டும். அவை என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்

ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, அடகு வைத்த தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சமாக 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும். இந்த சதவீதம், வங்கிகள், நிதி நிறுவனங்களைப் பொறுத்து மாறலாம்.

பெரும்பாலும் தங்கநகைக் கடன் வழங்குபவர்கள் இதற்கு செயல்முறைக் கட்டணம் வசூலிக்கமாட்டார்கள். ஆனால், மதிப்பீட்டுக் கட்டணம் உண்டு. இந்தக் கட்டணம் அதிகமாக இருந்தால் நீங்கள் வேறு நிறுவனங்களை நாடலாம்.

மற்ற ‘செக்யூரிட்டி’ இல்லாத மற்றும் பலவகை ‘செக்யூரிட்டி’ உள்ள கடன்களைவிட தங்கநகைக் கடன்கள் எளிதில் கிடைக்கும். நீங்கள் கடன் பெறும் நிறுவனத்தைப் பொறுத்து அதற்கு உண்டான வட்டியை ஒரு மாதம் அல்லது மூன்று மாதத்துக்கு ஒருமுறை செலுத்திக் கொள்ளலாம். இறுதியில் கடன் கால அளவு முடிவுக்கு வரும்போது அசலை திருப்பிச்செலுத்த வேண்டும். கடனுக்கு விண்ணப்பித்த உடன் மிக விரைவில் உங்களுக்குப் பணம் கிடைக்கும்.

தங்கத்தின் மூலம் கடன் வாங்குவதற்கு முன்னால் ஒன்றுக்குப் பத்து இடத்தில் விசாரியுங்கள். நீங்கள் அடகு வைக்கப்போகும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் தங்கத்தின் தரத்தையும் அறிந்துவைத்துக் கொள்ளுங்கள்.

தங்கநகையை வைத்துக் கடன் பெறுவோர், தவறாமல் வட்டி செலுத்தி, உரிய காலத்தில் அதை மீட்டுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நகை ‘மூழ்கிப் போகும்’ நிலை ஏற்படலாம்.

Leave a Reply