shadow

தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து தப்பிய 27 எம்.எல்.ஏக்கள்

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி நடந்து வரும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த 27 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஜனாதிபதிக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. அரசு மருத்துவமனைகளில் இயங்கி வரும் நோயாளிகள் நலக் கமிட்டிகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டு இருந்த இந்த 27 எம்.எல்.ஏக்கள் ஆதாயம் பெற்றதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது

ஆனால் இந்த மனுக்களை விசாரிப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை எனக்கூறி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த மனுக்களை நிராகரித்தார். இதன் காரணமாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 27 பேரின் பதவி தப்பியிருக்கிறது.

முன்னதாக நாடாளுமன்ற செயலாளர்களாக நியமிக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தேர்தல் கமிஷன் தகுதிநீக்கம் செய்ததும், அதை ஐகோர்ட்டு ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply