shadow

தகவல்களை ஹேக் செய்ய முடியாது: முதல் குவாண்டம் செயற்கைக் கோளை வெற்றிகரமாக செலுத்தியது சீனா

15ஹேக் செய்ய முடியாத தகவல் தொடர்புகளை வழங்கும் உலகின் முதல் குவாண்டம் தகவல் தொடர்பு செயற்கைக்கோளை சீனா இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

தகவல்களை ஹேக் செய்ய முடியாது: முதல் குவாண்டம் செயற்கைக் கோளை வெற்றிகரமாக செலுத்தியது சீனா
பீஜிங்:

குவாண்டம் போட்டான் துகள்களை எளிதில் உடைக்கவோ, பிரிக்கவோ முடியாது என்பதால் செயற்கைக் கோள் தகவல் தொடர்புக்கு இதனை பயன்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியது. அதன்படி, சீனாவின் விண்வெளி அமைப்பு உலகின் முதல் குவாண்டம் தகவல் தொழில்நுட்ப செயற்கைக் கோளை உருவாக்கியது.

இந்த செயற்கைக்கோள் கோபி பாலைவனத்தில் உள்ள ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.40 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிசியஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள் 600-கிலோவிற்கும் அதிகமான எடை கொண்டது. இது 90 நிமிடத்திற்கு ஒருமுறை பூமியை சுற்றி வரும்.

இந்த புதிய செயற்கைக்கோளின் உதவியுடன் பீஜிங் மற்றும் உரும்கி ஆகிய இரு நகரங்களுக்கு இடையே பாதுகாப்பான குவாண்டம் தகவல் தொடர்புகளை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தகவல் தொழில்நுட்பத்தில் புதிய சாதனையாக கருதப்படுகிறது.

Leave a Reply