shadow

டெல்லியில் பயங்கர புகைமூட்டம்: கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

டெல்லியில், காற்று மாசின் அளவு அபாயத்தை எட்டியுள்ளது. இதனால், புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. காற்றின் தரத்தை அளக்கும் `ஏர் குவாலிட்டி இன்டக்ஸ்’ (Air Quality Index) 300-400 இருந்தாலே மோசமான நிலை என்று அர்த்தம். ஆனால், டெல்லியில் கடந்த சில நாள்களாக 400-ஐ தாண்டிவிட்டது. இதனால், சாலையில் புகைமூட்டம் சூழ்ந்து, எதிரில் வரும் வாகனங்களே தெரியாத நிலை உருவாகியுள்ளது. புகைமூட்டத்தால், விமானங்கள் ரத்துசெய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், சரும பாதிப்புகள் என ஆரோக்கியமற்ற சூழல் நிலவிவருகிறது.

டெல்லியில் காற்று மாசு குறித்து இந்திய மருத்துவச் சங்கம் கூறுகையில், வழக்கமாக உள்ளதைவிட காற்று மாசு 12-லிருந்து 19 மடங்கு வரை அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளனர். இந்நிலையில், டெல்லியின் தற்போதைய சூழலைப் பிரதிபலிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

மதுரா – ஆக்ரா செல்லும் வழியில் பால்தேவ் மந்திர் என்னும் பகுதியில், எதிரில் உள்ள வாகனம் தெரியாமல் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் மோதிக்கொள்ளும் காட்சி மனதைப் பதறவைக்கிறது. யமுனா எக்ஸ்பிரஸ் வேயில் பதிவாகிய இந்தக் காட்சியில், 39 விநாடியில் 4 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிச் சேதமடைந்தன

 

//www.facebook.com/bunny.punia.3/videos/10159719562420226/

Leave a Reply