shadow

டுவிட்டர் ஊழியரின் சேட்டையால் டிரம்ப் டுவிட்டர் கணக்கு செயலிழப்பு

டுவிட்டரில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது வேலையின் கடைசி நாளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் டுவிட்டர் கணக்கை செயலிழக்க வைத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபரின் பர்சனல் டுவிட்டர் கணக்கு சமீபத்தில் திடீரென மாயமானது. இதுகுறித்து டுவிட்டர் நிறுவனத்தின் உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது டுவிட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பணியாளர் ஒருவர் தனது வேலையை விட முடிவு செய்து, கடைசி நாளாக நேற்று பணிக்கு வந்துள்ளார். கடைசி நாளின் வேலையில், டிரம்பின் ட்விட்டர் கணக்கை அவர் நீக்கிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து, வெள்ளை மாளிகையில் இருந்து தகவல் வந்ததும் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பாடுக்கு வந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக டுவிட்டர் நிறுவனம் கூறியிருந்தது. ஆனால் இதுகுறித்து வெள்ளை மாளிகை எந்தவித புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply