shadow

இந்தியா தனது புதிய டிஜிட்டல் இறையாண்மை கொள்கையை அறிவித்ததை அடுத்து அந்தக் கொள்கைக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்பட பல சமூக வலைதளங்கள் ஒப்புக்கொண்டன

ஆனால் டுவிட்டர் மட்டும் இந்தியாவின் புதிய சட்டத்தை ஒப்புக் கொள்ளாமல் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதுகுறித்து கூறியபோது இந்தியாவில் தொழில் புரியும் சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும் என்றும், சமூக ஊடகங்கள் வழியாக அவதூறு பரப்பப்படுவதை தடுப்பதற்கே இந்த புதிய சட்டங்கள் என்றும் இந்தியாவின் புதிய டிஜிட்டல் சட்டத்தை ஏற்க மறுத்தால் டுவிட்டருக்கு தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்