shadow

டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் 4 வருடம் 'கத்தி' கொண்டாட்டம்

  இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவான 'கத்தி' திரைப்படம் வெளியாகி சரியாக இன்றுடன் நான்கு வருடங்கள் முடிந்துவிட்டது. இந்த கொண்டாட்டத்தை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். இதற்கென ஒரு ஹேஷ்டேக் உருவாக்கிய விஜய் ரசிகர்கள் அந்த ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

இன்று ரஜினி, கமல் உள்பட பல பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வரும் லைகா நிறுவனத்தின் முதல் படம் 'கத்தி'. இந்த படம் பல்வேறு பிரச்சனை சந்தித்து வெளிவந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய்யின் மாறுபட்ட இரண்டு வேட நடிப்பு, சமந்தாவின் அழகு, அனிருத்தின் ஆர்ப்பாட்டமான இசை, ஏ.ஆர்.ரஹ்மானின் கூர்மையான வசனங்களுடன் கூடிய திரைக்கதை இந்த படத்தின் பிளஸ் ஆகும். 4 ஆண்டு 'கத்தி' கொண்டாட்டம் கொண்டாடும் விஜய் ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்

Leave a Reply