shadow

டுவிட்டரில் ஆபத்து காலங்களில் பயன்படுத்துபவர்கள் யார் யார்?

ஃபேஸ்புக்கை அடுத்து உலகம் முழுவதும் புகழ்பெற்ற டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் பயன்பாடு குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, இந்த ஆய்வில், டுவிட்டரை ஆபத்து காலங்களில் பயன்படுத்துவோர் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

ஆபத்து மற்றும் இயற்கை பேரழிவு காலங்களில் பல லட்சம் ஃபாலோர்களை கொண்டிருப்பவர்களை விட, 100 முதல் 200 என குறைந்த ஃபாலோர்களை கொண்டிருப்பவர்களே டுவிட்டர் தளத்தை அதிகளவு சரியாக பயன்படுத்துவதாகவும், குறைந்தளவில் ஃபாலோயர்களை கொண்டிருந்தாலும் சரியான தொடர்புகளை வைத்திருப்போர்களாக இருப்பதால் இவர்களுடைய பயன்பாட்டிற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் வெர்மாண்ட் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது.

மேலும் இயற்கை பேரிடர் போன்ற ஆபத்து காலங்களில் டுவிட்டர் பயன்படுத்துவோர் மீட்பு பணிகள் அல்லது நிவாரண பொருட்கள் பற்றியே அடிக்கடி தகவல் பரிமாற்றம் செய்திருக்கின்றனர்.

Leave a Reply