shadow

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ என்ற படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் சமூக வலைதளங்களில் இந்த டீசர் வைரலானது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் டீசரை அடுத்து நாளை இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஜெய்பீம் திரைப்படம் வரும் நவம்பர் 2-ம் தேதி அமேசான் போட்டியில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவும் ஃபிலோமினா ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். இந்த படத்திற்கு சீன்ரோல்டான் இசையமைத்துள்ளார்.