டி.ஆர்.பாலுவின் பொறுப்பு கே.என்.நேருவுக்கு: திமுக அதிரடி நடவடிக்கை

திமுக பிரமுகரும் மக்களவை எம்பியுமான டி.ஆர்.பாலு வகித்து வந்த பொறுப்பு ஒன்றை கே.என்.நேரு அவர்களுக்கு திமுக தலைமை வழங்கியதை அடுத்து திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திமுக முதன்மை செயலாளராக, சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த பதவியை டி.ஆர்.பாலு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் கே.என்.நேரு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply